ஒரு பேப்பர் இல்லாமல் ஸ்டாலினை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லுங்கள் – ராஜேந்திர பாலாஜி

ஒரு பேப்பர் இல்லாமல் ஸ்டாலினை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லுங்கள். பின்னர் அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கிறோம் என ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், எங்களிடம் தர்மம் இருக்கிறது. அதனால் நாங்கள் உரக்க பேசுகிறோம். எங்களிடம் பேச வரவில்லை என்றால், உங்களிடம் தப்பு இருக்கிறது. 2ஜி வழக்கில் நீங்கள் குற்றவாளியா இல்லையா? முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தானே பிடித்து சிறையில் வைத்தார்.ஸ்பெக்ரமராசா என்பதுதான் அவர் பெயர் என ராசாவை சாடியுள்ளார்.

மேலும், ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் திமுக கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. ஒரு பேப்பர் இல்லாமல் ஸ்டாலினை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லுங்கள். பின்னர் அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கிறோம் என விமர்சித்துள்ளார்.