புதிதாக துவங்கும் தொழில்களில் பெரும்பகுதியினை உள்ளூர் வாசிகளுக்கே கொடுக்க தெலுங்கானா முடிவு!

புதிதாக துவங்கும் வேலைகளில் பெரும்பகுதியை தெலுங்கானா வாசிகளுக்கு கொடுக்க அரசு முடிவு.

தெலுங்கானாவில் வெளி மாநிலங்களிலிருந்து வந்து பலரும் வேலை செய்து வருகின்றனர். இதனால் உள்ளூரில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது. எனவே தற்போது புதிதாக பல தொழில்கள் துவங்க இருப்பதால், 80 சதவீத அரைகுறை வேலைகளையும் 60 சதவீத திறமையான வேலைகளையும் உள்ளூர் மக்களுக்கே ஒதுக்க தெலுங்கானா அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி ராமராவ் மற்றும் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal