ஏப்ரல் 7க்குள் கொரோனாவில் இருந்து மீண்டுவிடும் தெலுங்கானா – சந்திரசேகர ராவ்

ஏப்ரல் 7க்குள் கொரோனாவில் இருந்து மீண்டுவிடும் தெலுங்கானா – சந்திரசேகர ராவ்

தெலுங்கானாவில் செய்தியாளர்களிடையே பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 58 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்த 25,937 அரசு கண்காணிப்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். 

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய அவர்களின் தனிமைப்படுத்திருக்கும் காலம் ஏப்ரல் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அன்றைய தினம் தெலுங்கானா மாநிலம் வைரஸிலிருந்து மீண்டுவிடும் என நம்புவதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த பயிர்கள் கிராமங்களுக்கே சென்று கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube