,

தொகுதி மேம்பாட்டு நிதியைகொண்டு வீடு கட்டினேன்.! மகனுக்கு திருமணம் செய்தேன்.! தெலுங்கானா பாஜக எம்பி பரபரப்பு.!

By

BJP MP Soyam bapurao

தெலுங்கானா பாஜக எம்பி சோயம் பாபுராவ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறியுள்ளளார். 

தெலுங்கானா ஆதிலாபாத் தொகுதி பாஜக எம்பி  சோயம் பாபுராவ் அண்மையில் அரசியல் விழா மேடையில் பேசுகையில், தான் தான் எம்பி ஆன பிறகு கூட எனக்கு எனது சொந்த தொகுதியில் வீடு கிடையது.

அதனால் எனது சொந்த தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து வீடு கட்டிகொண்டேன்.எனது மகன் திருமண செலவுகளுக்கு கூட தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தினேன் என வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜக எம்பி.

மேலும், மற்றவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மொத்தத்தையும் சுருட்டி விடுவார்கள். ஆனால் நான் மக்களுக்கு செலவு செய்து விட்டு, சிறுது பணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டேன் அத்தனையும் வெளிப்படையாக கூறிவிட்டேன். இந்த தைரியம் எனக்கு இருக்கிறது எனவும் பாஜக எம்பி  சோயம் பாபுராவ் மேடையில் பேசியுள்ளார்.