3 மாதத்தில் தேஜஸ் ரயில் மூலம் ரூ .17.8 கோடி வருவாய் !

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட அதிவேக தேஜஸ் ரயிலை பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொடக்கி வைத்தார்.

இந்த அதிவேக தேஜஸ் ரயில் 13 பெட்டிகள் கொண்டது.அதில்  57 பேர் பயணம் செய்யும் உயர்தர குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டியும், 78 பேர் பயணம் செய்யும் 12 குளிர்சாதனப் பெட்டிகளும் உள்ளது.இந்த பெட்டிகளில் இருக்கையில் பின் புறம் டிவி உள்ளது.மேலும் மொபைல் சார்ஜர் செய்யும் வசதியும் உள்ளது.

Image result for தேஜஸ் ரயில்

வாரத்தில் வியாழன் கிழமை தவிர மற்ற நாட்களில் மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடையும் .சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு  பகல் 12.30 மணிக்கு வந்தடையும்.

Image result for தேஜஸ் ரயில்

இந்நிலையில் இந்த ரயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.மேலும் கூடுதல் வருவாய் கிடப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.தேஜஸ் ரயில் மார்ச்  2 முதல் ஜூன் 27-ம் தேதி வரை அதாவது  கடந்த மூன்று மாதங்களாக 10 லட்சத்து 21ஆயிரத்து 76 பேர் பயணித்ததன் மூலம்  ரூ.17.8 கோடி வருவாய் கிடைத்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

author avatar
murugan