ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்! ட்ரோனை பார்த்ததும் தலைதெறிக்க ஓட்டம்!

ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரொனை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருச்சியில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத பகுதியில், இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் காவிரி பாலத்தின் அருகே ஒலிபெருக்கி மூலம் இளைஞர்களை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனை சிறிதும் பொருட்படுத்தால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இறுதி எச்சரிக்கையாக, ட்ரோன் கேமராவை அனுப்பியுள்ளனர். தங்களை ட்ரோன் கேமரா கண்காணிப்பதை சுதாரித்த இளைஞர்கள், அவ்விடத்தை விட்டு தலை தெறிக்க ஓட்டம் பிடித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.