“கண்ணீர் நிற்கவில்லை அம்மா” கண்கலங்கிய ’யுனிவர்ஸ் பாஸ்’..!! வைரலாகும் வீடியோ.!

கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் மறைந்த தனது தாயை நினைத்து கண்ணீரை விட்டு கவலைப்படும் வீடியோவை வெளிட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் பல சாதனைகள் படைத்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சதம் அடித்த வீரர்கள் மற்றும் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றனர்.

மேலும் கிறிஸ் கெய்ல் மாலத்தீவில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி சர்வதே அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் மறைந்த தனது தாயை நினைத்து கண்ணீரை விட்டு கவலைப்படும் வீடியோவை வெளிட்டுள்ளார். “என்னை நினைத்து நீங்கள் பெருமைப்படுவீர்கள் என்று எனக்கு தெரியும். கண்ணீர் நிற்கவில்லை அம்மா உங்கள் சிரிப்பை நான் என்றுமே மறக்கமாட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.