31 C
Chennai
Friday, October 22, 2021

கொரோனாவின் தோற்றத்தை கண்டறிய 26 பேர் கொண்ட குழு அமைப்பு – WHO

கொரோனாவின் தோற்றத்தை கண்டறிய சீனாவின் நகரில் பணியாற்றியவர்கள் உட்பட 26 பேர் கொண்ட குழு அமைப்பு.

முதலில் சீனாவின் யுகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸானது,  அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர், கொரோனாவின் தோற்றத்தை கண்டறிய சீனாவின் நகரில் பணியாற்றியவர்கள் உட்பட 26 பேர் கொண்ட குழு   அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொற்று நோய்கள் மற்றும் தொற்று நோய்களை தூண்டும் திறன் கொண்ட புதிய வைரஸ்களின் தோற்றம் இயற்கையானது. இந்த வரிசையில் சார்ஸ் கோவிட்-19 சமீபத்திய வைரஸ் என்றாலும், அது கடைசியாக இருக்காது என்றும், உலகையே நிலைகுலையச் செய்த வைரஸின் தோற்றத்தை கண்டறிய தற்போது முன்மொழியப்பட்டு இருக்கும் 26 பேர் கொண்ட குழுவானது கடைசியாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

Hot Topics

Read More