சற்று முன்: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! தோனி இருக்கிறாரா?

10
Indian cricket team discuss as they walk in to the playing are during the 5th cricket match of Asia Cup 2018 between India and Pakistan at Dubai International cricket stadium,Dubai, United Arab Emirates. 09-19-2018 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பராக மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் செயல்படுவார்கள். வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், முகமது சமி மற்றும் பும்ரா  ஆகியோரும் ஆல் ரவுண்டர்களக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அணி #CWC19 : விராத் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், எம்எஸ்டி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜாஸ்பிரிட் பும்ரா, ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம் ஷமி