தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி கிடையாது ..!

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி கிடையாது ..!

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால்  சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது. அதில், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பது கட்டாயம். தடுப்பூசி போடாத பணியாளர்கள்( ஆசிரியர் மற்றும் அசிரியரல்லாப் பணியாளர்கள்) கட்டாய விடுப்பில் அனுப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube