எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி  21-ஆம் தேதி  நியமனம்…! அமைச்சர் செங்கோட்டையன்

எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி  21-ஆம் தேதி  நியமிக்கப்படுவார்கள் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன்  கூறுகையில்,எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி  21-ஆம் தேதி  நியமிக்கப்படுவார்கள். மாணவர்களின் ஒழுக்கம் கற்பிக்க நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில்  ஜனவரி 19 ஆம் தேதி  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment