மே 16 ஆம் தேதி அரபிக்கடலில் உருவாகும் “தக்டே புயல்”;மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்…!

மே 16 ஆம் தேதி அரபிக்கடலில் உருவாகும் “தக்டே புயல்”;மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்…!

அரபிக்கடலில் மே 16 ஆம் தேதி “தக்டே” என்ற புயல் உருவாக வாய்ப்புள்ளது எனவும்,அவ்வாறு உருவாகினால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது.

இந்நிலையில்,அடுத்த இரு நாட்களில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது,வருகின்ற மே 14 ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது பின் தாழ்வு மண்டலமாக மாறும்.

Tauktae storm

அதன்பின் மே 16ம் தேதி இந்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளது.அவ்வாறு புயலாக மாறும் இதற்கு தக்டே என்று பெயர் வைக்கப்படும் என்றும்,மேலும்,இந்த புயல் வலுப்பெற்றால் மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீச்சும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால்,இந்த “தக்டே புயல்” எங்கே கரையை கடக்கும் என்று சொல்லப்படவில்லை.எனினும்,ஒருவேளை இந்த புயல் கேரள கரையோரம் வந்தால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தற்போது கன்னியாக்குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால்,பேச்சிபாறை உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனிடையே,வருகின்ற மே 16 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதால் மீன் பிடிக்க சென்றுள்ள கன்னியாக்குமரி மீனவர்கள் அனைவரும் 14 ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Join our channel google news Youtube