‘டவ்-தே’ புயல்: 17 பேர் உயிரிழப்பு..!16,500 வீடுகள் சேதம், 40,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன…!

குஜராத்தில் ‘டவ்-தே’ புயலால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,16,500 வீடுகள் சேதம் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ,டாமன் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது.இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.

அவ்வாறு,புயல் கரையைக் கடந்தபோது மும்பை மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் 175 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதனால்,தாழ்வான பகுதிகளில் இருந்து 13,500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து,குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் ‘டவ்-தே’புயலால் நிலச்சரிவை ஏற்பட்டது.மேலும்,பலத்த காற்று வீசியதால் 16,500 வீடுகள் சேதமடைந்தன.மேலும், 40,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனைத் தொடர்ந்து,குஜராத்தில் 52 கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் மற்றும் 13 ஆக்ஸிஜன் ஆலைகள் உட்பட 5,951 கிராமங்களில் இருந்து மின் தடை ஏற்பட்டது.

குறிப்பாக, ‘டவ்-தே’ புயலால் இதுவரை மகாராஷ்டிராவில் 12 பேர்,தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் 5 பேர் என இதுவரை மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,28 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மேலும், கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.