இந்த ஆண்டின் முதல் டாடா நிறுவனத்தின் கார்கள்… புதனன்று புதிதாக இறங்கபோகும் புத்தம்புது மாடல்கள்….

  • இந்த வருடத்தில் முதல் வரத்தாக களம்  இறங்க காத்திருக்கும் டாடா கார்.
  • புதிய பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்து கார்கள் களம் காணப்பொகின்றன.
      முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாம டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜனவரி 22-ம் தேதி அதாவது புதன் கிழமை இந்த ஆண்டிற்கான முதல் கார் வெளியீட்டு  நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் புதிய டாடா அல்ட்ரோஸ் காருடன் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்சான், டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் போன்ற கார்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று கார்களுக்கான முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன் துவங்கிய நிலையில், இதன் முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
Related image
மூன்று ஃபேஸ்லிஃப்ட் கார்களும் டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவில் உருவாக்கப்படுகின்றன. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் நெக்சான் இ.வி. மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வடிவமைப்பு டாடாவின் அல்ட்ரோஸ் மாடலை தழுவி உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது.
Image result for tata tiago
அந்த வகையில் இந்த  காரில் குரோம் லைன் கிரில் மற்றும் உயர்த்தப்பட்ட பொனெட் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கலாம். இந்த  இரண்டு மாடல்களிலும் ஸ்போர்ட் ரீடிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், புதிய கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வழங்கப்படலாம். இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை தற்போது  விற்பனையாகும் பி.எஸ்.4 மாடல்களின்  விலையை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என டாடா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனினும்,இந்த புதிய  வாகனங்களின் விலை விவரங்கள் பற்றி எவ்வித தகவலையும் டாடா நிறுவனம் வழங்கவில்லை.
Image result for tata tigor
டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் சந்தை விலை ஓரளவு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் வெர்ஷன் சந்தை விலை ரூ. 60,000 துவங்கி ரூ. 90,000 வரையிலும், நெக்சான் டீசல் வேரியண்ட் விலையில் ரூ. 1.4 லட்சம் வரை அதிகமக இருக்கும்  என கூறப்படுகிறது.
author avatar
Kaliraj