டாஸ்மாக் டோக்கன் கலர் ஜெராக்ஸ் – 16 பேர் கைது.!

டாஸ்மாக் டோக்கன் கலர் ஜெராக்ஸ் – 16 பேர் கைது.!

டாஸ்மாக் மதுபான டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கடலூரில் கைது செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் சுமார் 45 நாட்களுக்கு பிறகு கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு, உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் மதுக்கடைகள் திறப்பதன் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, மதுக்கடைகளில் மதுபான வாங்க டோக்கன் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதனால், மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்களுக்கு கிழமை வாரியாக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள கிழமைகளில் மதுவை வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டோக்கனுக்காக மதுப்பிரியர்கள் பலர் காத்து கிடக்கும் நிலையில், கடலூரில் டோக்கன் வாங்கிய சிலர் அதை கலர் ஜெராக்ஸ் எடுத்து, டோக்கன் இல்லாதவர்களிடம் விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த காவல்துறை உடனடியாக சென்று மோசடியில் ஈடுபட்ட 16 பேரை கடலூர் காவல்துறை கைது செய்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube