இன்று டாஸ்மாக் கடை இயங்குமா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்;ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக,டாஸ்மாக் நிர்வாகம் தனது அறிவிப்பில் முன்னதாகவே கூறியுள்ளதாவது:

“23.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநிலம் முழுவதும் முழு அமல்படுத்தப்படவுள்ளது.இதன்காரணமாக, 23.01.2022 அன்று அனைத்து சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்.எனவே,அனைத்து மாவட்ட மேலாளர்களும் இதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்,மதுப்பிரியர்கள் சிலர் நேற்றே மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.