'குடி'மகன்களின் பிடியில் இருந்து மதுபானங்களை பாதுகாக்க திருச்சி மாநகராட்சி புதிய வியூகம்… காவல்துறை பாதுகாப்புடன் அசத்தல்…

கொரோனா தொற்றை தடுக்க இந்தியா முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன்எனப்படும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில்  இந்த ஊரடங்கு  மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரிய தலைவலியை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திருச்சியில் சில தினங்களுக்கு முன்பாக 2  கடைகளின் கதவு கடைகள் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதனையடுத்து மதுபாட்டில்களை மதுப்பிரியர்களிடமிருந்து  பாதுகாக்க திருச்சி  மாநகராட்சி சார்பில் புதிய முறையை கையாண்டுள்ளது. அதாவது, அனைத்து மதுபாட்டில்களையும் ஒரே இடத்துக்கு மாற்றி அங்கு காவலர்கள் மூலம் பலத்த  பாதுகாப்பு போட முடிவெடுத்தது. இந்த முடிவைத் தொடர்ந்து கடந்த இருநாட்களாக டாஸ்மாக் கடைகளில் இருந்து கடைகளிலிருந்து மதுபாட்டில்களை பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டு ஒரு மண்டபத்தில்  சேர்க்கப்பட்டன. இந்த இடத்தை  சுற்றி காவலர்கள் மூலம் பலத்த  பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.மேலும்,  கண்காணிப்பு கேமராக்களும், டாஸ்மாக்  ஊழியர்களும் மதுபாட்டில்களுக்கு பாதுகாவலுக்கு  இருக்கின்றனர்.

author avatar
Kaliraj