கோவையில் கோலாகலமாக தயார் நிலையில் உள்ள டாஸ்மாக் கடை!

கோவையில் வாழைமர தோரணம் கட்டி, பூஜையுடன் மதுவிற்பனைக்கு தயார் நிலையில் உள்ள மதுக்கடை.

இந்தியாவில்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும், மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,600-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மது கிடைக்காமல், மதுபான பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். மே-7-ம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என தமிழக ராசு அனுமதி அளித்துள்ள நிலையில், அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனையடுத்து, கோவையில்,  தொண்டாமுத்தூரில் வாழை மர தோரணம் கட்டி, பூசைகள் செய்து மதுவிற்பனைக்கு தயார் நிலையில் டாஸ்மாக் கடைகள் ஆயத்த நிலையில் உள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.