விமானப்படையில் விமானத்தின் முதல் பெண் காமாண்டர் தாமி நியமனம்..!

இந்திய விமானப்படையில் விங் காமாண்டராக இருப்பவர் ஷாலிஜா தாமி .இவர் கடந்த 15 வருடங்களாக விமானப்படையில் உள்ளார்.இந்நிலையில் ஷாலிஜா தமி அவருக்கு விமானப்படையில் விமானத்தின் காமாண்டர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது.

உத்திரபிரதேசத்தில் உள்ள ஹிந்தான் விமான தளத்தில் உள்ள சேத்தக் என்ற ஹெலிகாப்டரை இவர் இயக்கி உள்ளார்.இந்த சேத்தக் ஹெலிகாப்டர் மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது.இந்த  ஹெலிகாப்டர் நிவாரண பொருட்கள் எடுத்து செல்லவும் , அவரச மருத்துவ சிகிக்சை கொடுக்கவும் மற்றும் தேடுதல் பணிக்கு பயன்படுகிறது.

இவ்விமனத்தின் இரண்டாவது காமாண்டராக ஷாலிஜா தாமி நியமிக்கப்பட்டு உள்ளார். தலைமை காமாண்டர் அடுத்த பதவியாக இப்பதவி உள்ளது.இதன் மூலம் விமானப்படையில் விமானத்தின் இயக்கம் முதல் பெண் காமாண்டர் சிறப்பை பெற்று உள்ளார்.

author avatar
murugan