அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.! வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.!

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.

தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் தமிழகத்தில் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதனை தணிக்கும் வகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலை 11.30 மணி முதல் 3 மணி வரையில் யாரும் வெளியே வேலை செய்ய வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.