டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த, எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மன அழுத்தம் காரணமாக வகுப்பறையில் மாணவர் ரிஷி ஜோஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவரை நேற்று மாலை முதல் காணவில்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்கொலை செய்வதற்கு முன் ரிஷி ஜோஷ்வா தன்னுடைய பேராசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.