ஒய்வூதியர்கள் கவனத்திற்கு! அரசு அரசாணை அறிவிப்பு

ஒய்வூதியர்கள் கவனத்திற்கு! அரசு அரசாணை அறிவிப்பு

ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப  ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்களித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்துக்குள், உயிர்வாழ் சான்றிதழ், வேலையில்லாததற்கான சான்றிதழ், திருமணம், மறுமணம் செய்யாததற்கான சான்றிதழ்களை அந்தந்தமாவட்ட ஓய்வூதியம் வழங்குகின்ற அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு  ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி ஓய்வூதியர்களை நேரில் அழைப்பார்.

இவ்வாறு நேரில் ஆஜராகாத பட்சத்தில் அந்த மாதத்தில் இருந்து ஓய்வூதியமானது நிறுத்தப்படும்.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஓய்வூதியர்கள்உயிர்வாழ் சான்றிதழை அவர்களிடம் இருந்து பெறுவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இது குறித்து  ஒரு முடிவெடுக்க அரசுக்கு  கருவூலத் துறை ஆணையர் கோரிக்கை வைத்தார்.அந்த கோரிக்கையில்  குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் அளிப்பதில் இருந்து  இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்களிக்க  வேண்டும் என்று தனது கோரிக்கையில் கூறியிருந்தார்.இந்நிலையில் இவரது கோரிக்கையை கருத்தில் கொண்டும் அதனை  ஏற்று தமிழக அரசு  கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சிறப்பினமாக இந்த ஆண்டுக்கு மட்டும் உயிர்வாழ் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் அளிப்பதில் இருந்து விலக்களித்து அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube