மாணவியின் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

By

Tamilnadu CM MK Stalin

பஞ்சாப் மாணவி உயிரை காப்பாற்றிய ராணுவ வீரருக்கு தமிழக முதல்வர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலம் பாட்டியலாவில் பக்ரா எனும் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயில் 19 வயது மாணவி ஒருவர் தவறுதலாக உள்ளே விழுந்து விட்டார். உடனே அருகில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் என்பவர் உடனடியாக கால்வாயில் துணிச்சலுடன் குதித்து அந்த மாணவியை உயிருடன் காப்பாற்றி உள்ளார்.

இவரது இந்த தைரியமான செயலை கண்டு ராணுவ உயர் அதிகாரி நவநீதகிருஷ்ணனுக்கு பதக்கம் வழங்கி கௌரவித்தார். இந்த செய்தியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அதில், இன்னல் நேரும் தருணத்தில் தன்னுயிர் பாராமல் பஞ்சாப் மாணவியின் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.