மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கமலின் கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர இருந்து வருகின்றது.இதனால் இவர் மீது பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இது தொடர்பாக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ இந்து என்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்குமுன் ஆள வந்தாராலோ, இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம், மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாக கொள்வது எத்தகைய அறியாமை,

இந்தியர் என்ற அடையாளம் சமீபத்தியது தான், எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல், ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வு , தமிழா நீ தலைவனாக வேண்டும், அதுவே என் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.