தமிழ் புத்தாண்டு : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து

18

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.  

நமது பாரம்பரிய விழாக்களில் சில மறக்கப்பட்டாலும், சில விழாக்கால இன்று நமது தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.இன்று தமிழ் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில்  நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும்மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்ட பதிவில்,  ‘தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும். அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என்று பதிவிட்டுள்ளார்.