எது நம் தமிழ் புத்தாண்டு? சித்திரையில் நித்திரை காணும் தமிழர்கள்!

“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
-பாரதிதாசன்.

தமிழகம் முழுவதும் அரசு ஏடுப்படி நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஆனால் தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று அல்லது ஒன்றா என்ற ஒரு பெரும் குழப்பம் காலம் காலமாக இருந்து வருகிறது. சித்திரை ஒன்று என்பது அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறிக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பரபவ’ முதல் ‘அட்சய’ என்று 60 பெயர்கள் உள்ளது. ஆனால் இதில் ஒன்று கூட தமிழில் இல்லை.

ஆரியர்கள் தமிழகத்தில் ஊடுறுவல் செய்தபோது இந்த முறை தமிழகத்தில் வழக்கமாக ஏற்பட்டது. மேலும் வட மாநில மன்னர்கள் கனிஷ்கன் மற்றும் சாலிவாகனன் போன்றவர்கள் தமிழகத்தில் தங்கள் குடி ஆட்சியை அமைத்து இருந்தபோது இந்த முறை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் தமிழர்கள் காலத்தை ஆறு பருவங்களாகப் பிரித்து இருந்தனர்.

  1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
  2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
  3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
  4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
  5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
  6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)

 

இதில் முதல் பருவம் தை முதல் மாசி வரை உண்டான மாதங்களுக்கு உரிய.து அப்படிப் பார்த்தால் தமிழர்களின் பாரம்பரியம் தை 1 தான் தமிழ் புத்தாண்டு என்று நமக்கு தெரியும்.

author avatar
Srimahath

Leave a Comment