பாபர் மசூதி இடிப்பு வழக்கு… மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகா கேவலமாகும்…..

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவர்கள் விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 1992 டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இந்து மதத் தலைவர்களாலும், கரசேவகர்களாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆர்.எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மதவெறியூட்டப்பட்ட ‘கரசேவகர்’களைத் திரட்டி, பயிற்சியளித்து, பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தன.மேலும், அந்தக் கொடுங்குற்றச் செயலை நியாயப்படுத்தியே வந்துள்ளன. இந்நிலையில் அயோத்தி பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி தொடர்பான ‘நிலம்‘ குறித்த தகராறாக முன் வைக்கப்பட்ட உரிமையியல் வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆவண சாட்சியங்களையும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரத்தையும் அலட்சியம் செய்து விட்டு, ’நம்பிக்கையை’ ஆதாரப்படுத்தி அளித்த இறுதித் தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ’கொடுங்குற்றச் செயல்’ என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதிபடக் கூறியிருந்தது.

இந்நிலையில், அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பாஜக முக்கிய புள்ளிகளான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால் உட்பட  அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மதவெறி தூண்டுதலால் இழைக்கப்படும் குற்றங்களுக்கு தண்டனை ஏதும் இல்லை என்றால், குற்றச் செயல்களில் இனி பலரும் எந்த அச்சமுமின்றி ஈடுபடுவார்கள். இந்த செயல், ‘ பல விபரீத விளைவுகளுக்கு’ பச்சைக் கொடி காட்டுவதாகவே அமைந்துள்ளது.

அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்றச் சம்பவங்களை நொடிக்கு, நொடி இடைவிடாமல் மின்னணு ஊடகங்கள் ஏற்கனவே  வெளியிட்டிருக்கின்றன. அச்சு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தொகுக்கப்பட்ட ஆவணங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வாளர்கள் விரிவாக கள ஆய்வு செய்து, அசைக்க முடியாத ஆதாரங்களோடு குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் அடையாளங்காட்டியுள்ளனர். இவைகள் எதனையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

kavitha

Recent Posts

6000mAh பேட்டரி…அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய ‘மோட்டோ ஜி 64 5 ஜி’…விற்பனை எகிற போகுது!

Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு…

28 mins ago

ஷங்கர் மகள் திருமணம்…விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!

Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்…

36 mins ago

ஐபிஎல் போட்டியில் டாஸ் ஃபிக்சிங்? சர்ச்சையை கிளப்பிய டு பிளெசிஸ் வீடியோ !

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும்…

1 hour ago

மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது… உச்சநீதிமன்றம்!

Supreme court: மீண்டும் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்…

1 hour ago

ஒன் மேன் ஷோ! வசூலில் அதிரடி கிளப்பும் ஆவேசம்!

Aavesham : பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை கடந்துள்ளது. மலையாள சினிமாவில் இருந்து சமீப காலமாக வெளியான…

2 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Weather Update: அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழ்கத்தின் 4 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்…

2 hours ago