ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை முற்றாக விடுவிக்க வேண்டும் – தமிழருவி மணியன்..!

சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை முற்றாக விடுவிக்க வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் ஒற்றை நோக்கமாகும். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற இரண்டு இலட்சியப் பதாகைகளைச் சுமந்தபடி காந்திய மக்கள் இயக்கம் தன் பயணத்தைத் தொடர்கிறது.

உண்மை, நேர்மை, ஒழுக்கம், சமூக நலன் சார்ந்த சிந்தனை, தன்னல மறுப்பு ஆகியவையே மேலான அரசியல்வாதிகளின் பண்பு நலன்கள் ஆகும். ஆனால் நம்முடைய அரசியல்வாதிகளிடம் இவற்றை காண்பதற்கில்லை. இழிந்த சாக்கடையாக மாறிவிட்ட அரசியலமைப்பை சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான வாக்காளர்களிடம் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.

இந்தநிலையில் வரவிருக்கும் தேர்தலின் மூலம் எந்த அதிசயமும் அரங்கேறப் போவதில்லை ஆட்சி நாற்காலியில் அமரும் மனிதர்கள் ஒருவேளை மாறக்கூடும் ஆனால் நெறி சார்ந்த நல்லரசியல் வாய்ப்பதற்கு வழியில்லை. எப்படியாவது ஒரு சந்தர்ப்பவாத அணியில் இடம் பெற்று இரண்டு மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தித் தன் இருப்பை வெளிப் படுத்தும் அருவருப்பான அரசியலில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை களத்தில் நிற்கும் எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது என தெரிவித்துள்ளார்.

murugan

Recent Posts

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

29 mins ago

தோனி என்ன வெளியே போனு சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

34 mins ago

வாக்கு சதவீதத்தில் குளறுபடி… தமிழ்நாடு அறிவித்ததை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

1 hour ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

4 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

12 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

13 hours ago