ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த தமிழ்நாடு!

ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த தமிழ்நாடு.

மத்திய அரசின் கொள்கை திட்டங்களை வகுக்கும், நிதி ஆயோக் அமைப்பு போட்டித்திறன் மையத்துடன் இணைந்து, ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ள மாநிலங்களின் குறியீட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களான குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.

அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல் மற்றும் ஏற்றுமதி செயல்பாடு அஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையில், இந்த மூன்று மாநிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பு, மாநில அரசுகள் ஏற்றுமதி துறையை மேம்படுத்த தனி துறையை ஒதுக்க வேண்டும் எனவும், வரும் ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி இருமடங்காக அதிகரிக்கும் என்றும்  தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.