முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பு ! தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூண் அமைக்கப்பட்டது.ஆனால் நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் தூண் புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்தனர்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பேரதிர்ச்சி அளிக்கிறது என  முதலமைச்சர் பழனிசாமி கருத்து :

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் பழனிசாமி பதிவிட்டுள்ள பதிவில்,இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

வன்மையாகக் கண்டிக்கிறேன் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து :

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் துணை  முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ள பதிவில்,இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் மோடி  கண்டனம் தெரிவித்திட வேண்டும் என ஸ்டாலின் கருத்து :

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள பதிவில்,ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்கள்.பிரதமர் மோடி இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திட வேண்டும்! இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…

8 mins ago

அய்யா! பும்ரா பந்தை அடிச்சிட்டேன்! அசுதோஷ் சர்மா உற்சாக பேச்சு!

ஐபிஎல் 2024  : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…

18 mins ago

அடடே.! பீட்ரூட்டை வைத்து ரசம் கூட செய்யலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில்  தினமும்  சேர்த்து கொண்டோம் என்றால்  ரத்த…

22 mins ago

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்… அதிகாலை நடந்த பரபரப்பு சம்பவம்!

Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர்…

27 mins ago

மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு.! பதற்றத்தில் வாக்காளர்கள்…

Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில்…

30 mins ago

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…

1 hour ago