சலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி… பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்…

சலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி… பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்…

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியா மட்டுமின்றி உலகிற்கே பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த கொடிய கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,547 பேரிலிருந்து 2,902 பேராக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த கொடிய கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக  அத்தியவசிய பொருள்கள் மட்டும் கிடைக்கும் வகையில் அந்த கடைகளை மட்டும் திறக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் சமுக வலைதளங்களில் சலூன் கடைகள் திறக்க காலை 7மணி முதல் 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி குறித்து தமிழக சீர்மிகு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சமுக வலைதளங்களில் வரும் தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா நிவாரண நிதியுதவி அளியுங்கள் என யாராவது உங்களை தொலைபேசி வாயிலாக அழைத்தால் அவர்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube