தமிழகம் நல்ல கலாச்சாரத்திற்கும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது.! மத்திய அமைச்சர் பாராட்டு.!

தமிழகம் நல்ல கலாச்சாரத்திற்கும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது.! மத்திய அமைச்சர் பாராட்டு.!

  • ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழகம் நல்ல கலாச்சாரத்திற்கும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில் 2வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து நிறுவனத்தின் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி மற்றும் வகுப்பு அறை கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியா சிறந்த முறையில் தயாராகி வருவதாகவும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை போல பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் விளையாட்டு துறைகளில் ஏராளமான திறமைகளும் சாதனைங்களும் நிறைந்துள்ளது எனவும், மத்திய அரசு திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறது. இந்தியா விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கு ஏராளமான திறமைகளை பெற்றுள்ள தமிழகமும் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது. பின்னர் மத்திய அரசு தமிழகத்திற்கு உதவிகளைச் செய்து வருகிறது. திறமையான வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக உயர் தரமான பயிற்சி மையங்கள் கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகம் நல்ல கலாச்சாரத்திற்கும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது. மத்திய அரசு அதனை வளர்க்க பாடுபடும் என அமைச்சர் கிரண்ரிஜிஜூ தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube