மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது – முதல்வர்

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக தமிழகம் உள்ளது. அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியுள்ளார். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தற்போதுள்ள 3,250 மருத்துவ இடங்களுடன் புதிதாக 1,250- இடங்களுக்கும் சேர்த்து சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளார். மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 32,600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்