அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது -முதல்வர்..!

அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது -முதல்வர்..!

Default Image

நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோட்டில் முதல்வர் இன்று பேசினார். அப்போது, 2011 ஆம் ஆண்டில் திமுகவின் மின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி செய்தியாளரை சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், இன்று கடுமையான மின்வெட்டு உள்ளது என கேட்டதற்கு ஆற்காடு வீராசாமி பதிலளித்தார். உண்மைதான் எங்கள் ஆட்சி போ என்றால் மின் வெட்டு கூட போய் விடும் என கூறினார். அதேபோல 2011-ஆம் ஆண்டு திமுக போய்விட்டது என முதல்வர் தெரிவித்தார்.

அதேநேரத்தில் கடந்த 2011 ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கூறினார் . கடுமையான மின்வெட்டு உள்ளது நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவேன் என கூறினார். அதேபோல மூன்று ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கியவர் ஜெயலலிதா. அந்த வழியிலேயே நடந்து கொண்டிருக்கும் அதிமுக அரசு இன்றையதினம் மின்மிகை மாநிலமாக உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என ஸ்டாலின் கூறினார். கேரளா மற்றும் டெல்லியில் கொரோனா குறைந்துவிட்டது, அங்குள்ள முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என கூறினார். இப்பொழுது ஸ்டாலின் கேரளா மற்றும் டெல்லியை பார்க்கவும், தமிழ்நாட்டையும் பார்க்கவும் என கேள்வி எழுப்பினார்.

கேரளாவில் நாளொன்றுக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கின்றன. அங்கு உள்ள மக்கள் தொகையை தமிழ்நாட்டில் பாதி அளவுதான் ஆனால் நேற்று முன்தினம் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மட்டும்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.

ஆகையால், தமிழ்நாட்டில் சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததால் தான் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் சொன்ன ஆலோசனையை தவறாமல் பின்பற்றி காரணத்தினால் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் குறைந்துள்ளது என தெரிவித்தார்.

Join our channel google news Youtube