பாமக கோரிக்கை ஏற்ற கல்விக் கட்டணத்தை தமிழக அரசு செலுத்துவது மகிழ்ச்சி – ராமதாஸ்

பாமக கோரிக்கை ஏற்ற கல்விக் கட்டணத்தை தமிழக அரசு செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். அதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,  தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும் என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். கல்வி கட்டணம், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தும் என தெரிவித்தார்.

தற்போது, இதற்கு பா.ம.க.கட்சி நிறுவனர் ராமதாஸ் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார். அதில், பா.ம.க.வின் யோசனையை ஏற்று, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாமக கோரிக்கை ஏற்கப்பட்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment