ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!

tn government

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நஷீமுதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக சுப்பிரமணியத்தை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக இருந்த மோகன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்த நிர்மல்ராஜ் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை ஆணையராக டி.என்.வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.