ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாகவே தமிழகஅரசு செயல்படும் …! அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாகவே தமிழகஅரசு செயல்படும் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைப்பதாக பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்தது.இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.அதில் நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை.தூத்துக்குடியில் மோசமான நிலைமைக்கு நிலத்தடி நீர் செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை. நிலத்தடி நீர் மாசு காரணமாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது என்று தெரிவித்தது.அதற்கு
2014 – 2018 வரை நோட்டீஸ் எதுவும் அனுப்பப்பட்டதா? என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கில் விசாரணை நிறைவுபெற்றது. ஸ்டெர்லைட் வழக்கில் வரும்(டிசம்பர் 17 ஆம் தேதி) திங்கள் கிழமைக்குள் அதாவது நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு வெளியிட்டது.
Image result for கடம்பூர் ராஜூ ஸ்டெர்லைட்
இந்நிலையில் இன்று தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக சேலத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாகவே தமிழகஅரசு செயல்படும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத்தான் ஸ்டெர்லைட் மூடப்பட்டதாகவும்  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Leave a Comment