Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடுஆளுநருக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு முறையீடு!

ஆளுநருக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு முறையீடு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் முறையீடு செய்துள்ளார்.  அதாவது, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மனுவில் புகார் அளித்துள்ளனர்.

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. அரசு அனுப்பும் மசோதாக்கள், உத்தரவுகளுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போடுவதாகவும் மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சனாதன ஒழிப்பு பற்றி பேசிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.! சென்னை உயர்நீதிமன்றம்.!

அதாவது, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம், துணை வேந்தர்கள் நியமனத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக என 2 மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் முறையீடு செய்துள்ளார். இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி மற்றொரு வழக்கில் கருத்து கூறியுள்ளார்.

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். பஞ்சாபை போல தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகளுக்கும் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.