சின்னதம்பி யானையை பிடிக்க தமிழக வனத்துறைக்கு  அனுமதி !!

கடந்த 25-ம் தேதி  கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால்,கடந்த சில நாள்களாக சின்னத்தம்பி யானை தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி சுற்றி வருகிறது.

இதற்கு சின்னத்தம்பி என்ற யானையை கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

Image result for high court chennai

இந்நிலையில்  சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.அதை விசாரித்த உயர்நீதிமன்றம்,  சின்னதம்பி யானையை பிடிக்க தமிழக வனத்துறைக்கு  அனுமதி அளித்துள்ளது.யானைக்கு காயம் ஏற்படாமல் பிடிக்க வேண்டும் . மக்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் . சின்னதம்பியை வனத்துக்கு அனுப்புவதா, முகாமில் பராமரிப்பதா என பின்னர் முடிவு செய்யப்படும் என்று  தெரிவித்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment