இவர்கள் இருவரின் பதற்றத்தை தமிழக விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் – ஜோதிமணி எம்.பி

விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை வரவேற்கிறேன்.

இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தீர்மானம் கொண்டு வந்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மற்ற கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாங்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து, எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை வரவேற்கிறேன். விவசாயிகளை கார்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் #பாலியல்பாஜக, #அடிமைஅதிமுக இருவரின் பதற்றத்தை தமிழக விவசாயிகள் புரிந்துகொள்வார்கள் என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.