தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை – கார்த்திக் சிதம்பரம்

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், நேற்று முதல், தேர்வு எழுதுபவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் நீட் தேர்வு குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘என்னை பொறுத்தவரையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை.  ஆனாலும், இன்றைக்கு சட்ட ரீதியாக வேறு வழி இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால், இதில் இருந்து வெளிவர தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை இந்த ஆண்டே எடுத்து, அதில் வெற்றி பெறுவார்களா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், வருங்காலத்திலே நீட் தேர்வை விட்டு தமிழ்நாடு விலகுவது தான், தமிழக கிராம புற மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சரியாக இருக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.