“தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

“தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவீந்திர நாராயண ரவி அவர்களுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார்.அதன்பின்னர், நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவீந்திர நாராயண் ரவி அவர்களுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது”,என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து முதல்வர் கூறியதாவது:

“பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது”,என்று பதிவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube