29 C
Chennai
Wednesday, June 7, 2023

ஜூன் 17-ஆம் தேதி மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

ஜூன் 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு...

இந்த செயல் வேலியே பயிரை மேய்வது போல உள்ளது – ஓபிஎஸ்

ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை...

யாஷிகாவுடன் காதலா..? அந்தர் பல்டி அடித்த அஜித் உறவினர் ரிச்சர்ட்..!!

நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதி இல்லை மதம் இல்லை..! பால பிரஜாபதி அடிகளார் பேச்சு.!

விழுப்புரத்தில் தமிழக முதல்வருக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது . தமிழ் இன உணர்வு இருக்கிறது என பால பிரஜாபதி அடிகளார் பேசியுள்ளார். 

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் காமினிஸ்ட கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பால பிரஜாபதி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய அய்யா வழி இந்து சமய தலைவர் பால பிரஜாபதி அடிகளார், நான் இங்கு வந்ததற்கு காரணம் நன்றி சொல்வதற்கு தான். எல்லா சாமிகளும் ஜாதிகள் இல்லை என கூறும் இடதுசாரிகள் தான். ஆனால், அதனை பின்பற்றுபவர்கள் வலதுசாரிகளாக இருக்கின்றனர் என குறிப்பிட்டு பேசினார்.

மேலும், எல்லா ஊர்களிலும் சமூக நீதியை காப்பாற்றும் சமூகம் தமிழ் சமூகம். நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது தமிழ் இனம் இருக்கிறது. இன உணர்வு இருக்கிறது என குறிப்பிட்டு பேசி முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்து பேசினார்.