#Breaking:மத்திய அமைச்சராக எல்.முருகன் பதவியேற்பு..!

மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று பதவியேற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த  ஆட்சியைப் பிடித்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.ஆனால்,மத்திய அமைச்சரவை முதல் முறையாக இன்று விவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து,புதிய அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர்.அதில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவானது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இந்நிலையில்,மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர்கள் பலரும் மத்திய அமைச்சரான எல்.முருகன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையில்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வதால்,ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த, ஹர்ஷ்வர்தன், ரமேஷ் பொக்ரியால், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.