தமிழக சட்டசபை ஒத்திவைப்பு…..!!

9

மத்திய அரசின் பட்ஜெட்  பிப்ரவரி 01_ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் சட்ட சபை கூட்டம் பிப்ரவரி 08_ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழக நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.மேலும் தமிழக முதல்வர் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளிட்டார்.

இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் பிப் 11ஆம் தேதி முதல் வரை நடைபெற்று வந்த நிலையில் சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் பட்ஜெட்டை ஒத்திவைத்தார்.   இன்றைய சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.