தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் விழுந்து விட்டது- நடிகர் கருணாஸ்.!

தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் விழுந்து விட்டதாகவும் ,அதனை மீட்டெடுக்கும் பொறுப்பு நிர்வாகிகளுக்கு உள்ளதாகவும் நடிகர் கருணாஸ் கூறினார்.

.இந்த நிலையில் தற்போது பல வழக்குகளுக்கும் , சர்ச்சைகளுக்கு பிறகு இன்று தயாரிப்பாளர் சங்க தேர்தல் சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 4 மணி முடிவடைந்தது . தலைவர்,துணை தலைவர்,பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிக்கு பலர் போட்டியிட்டனர் .சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சில பல காரணங்களால் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர் பிரிந்து தனியாக இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தொடங்கியதும்,அதில் உள்ளவர்கள் எவரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய நடிகர் கருணாஸ் , தற்போது பள்ளத்தாக்கில் தென்னிந்தியாவின் தாயான தமிழ் சினிமா விழுந்து விட்டது.அதனை மீட்டெடுக்கும் பொறுப்பானது தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெறும் நிர்வாகிகளுக்கு உள்ளது என்று கூறினார் .மேலும் கூறிய அவர் இயக்குனர் பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கியது சரியான நடவடிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment