பாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு மற்றும் லாடக்கை தலைநகராக கொண்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டணம் தெரிவித்தது.

ஒருபுறம் சென்றுகொண்டிருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை எப்போது வேண்டுமானாலும் சூழ்நிலைக்கேற்ப மாற்றிகொள்ளும் என்று தெரிவித்தார்.

Image result for rajnath singh

இந்த நிலையில் ஹரியனாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் தவறான முடிவை எடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமைப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.அதுவும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.