காற்று மாசு அதிகமுள்ள தலைநகரங்களில் பட்டியலில் டெல்லி முதலிடம்..!

உலகில் காற்றுமாசு அதிகம் உள்ள நாடாக பங்களாதேஷும், காற்றுமாசு அதிகம் உள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லியும் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வில் தகவல்.  கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு, காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பு வரம்பை மாற்றியமைத்தது. அதன்படி, காற்றில் உள்ள துகள்களின் சராசரி 1 மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. காற்று மாசு குறித்து ஆய்வு  உலக சுகாதார அமைப்பால் காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது … Read more

கொரோனா குறித்து பரவும் தவறான தகவல்கள் – WHO எச்சரிக்கை…!

உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக கொரோன தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா குறித்த தவறான தகவல்கள்  கொரோனா தொற்று குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.  உலக சுகாதார மையத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப தலைமை அதிகாரி மரியா வான் கெர்கோவ் அவர்கள் கொரோனா பரவல் … Read more

57 நாடுகளில் வேகமாக பரவும் புதிய ஒமைக்ரான்.. WHO எச்சரிக்கை.!

ஓமைக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் மாறுபாட்டான ஒமைக்ரான் வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸ் அளவிற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், ஓமிக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

ஓமைக்ரானை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் – WHO

ஓமைக்ரான் பாதிப்பு கடுமையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் லேசானதாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் ஆனது அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு நாடுகளும் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப நாட்களாக உச்சத்தில் காணப்படுகிறது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் … Read more

ஜாக்கிரதை : ஓமைக்ரான் – நீங்கள் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரா..? எச்சரிக்கை விடுத்த WHO ..!

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஓமைக்ரான் வகை கொரோனா பரவுவது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல … Read more

புகையிலை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது ஊக்கமளிக்கிறது – WHO மகிழ்ச்சி!

புகையிலை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது ஊக்கமளிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகிப்பவர்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடந்த 2015 ஆம் ஆண்டு 1.32 மில்லியனாக இருந்த புகையிலை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை, தற்போது 1.30 ஆக குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் 1.27 பில்லியன் ஆக குறையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2025 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் … Read more

ஐரோப்பாவை தவிர எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது – WHO!

உலகில் ஐரோப்பாவை தவிர எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது என WHO தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக அளவில் ஐரோப்பாவில் தான் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிக அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், உலக அளவில் சுமார் 3.1 மில்லியன் கொரோனா வழக்குகள் இருப்பதாகவும், இது முந்தைய வாரத்தை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது – WHO விஞ்ஞானி!

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது என WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தற்பொழுது இந்தியாவில் குறைந்துள்ளதாகவும், வரப்போகும் மாதங்களில் இன்னும் கவனமுடன் கொரோனா பரவலை கையாள வேண்டும் எனவும், அப்பொழுது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் எனவும் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா போலியோ ஒழிப்பு மற்றும் வேறு சில நோய்களுக்கும் தடுப்பூசி … Read more

தடுப்பூசி ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு நன்றி – WHO தலைவர்!

தடுப்பூசி ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு நன்றி என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய தொடங்கும் என நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் நாட்டு மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 81 கோடிக்கும் அதிகமானோர் நாட்டில் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இது குறித்து … Read more

“மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்…!

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த 14-ம் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் சிலர் முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் எனவும் சிலர் 1 முதல் 8 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கலாம் என … Read more