இந்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் – WHO எச்சரிக்கை

4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை. மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி சிரப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஆப்ரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு அந்நிறுவனத்தின் இருமல் மற்றும் சளி மருந்து காரணமானதால் பயன்பாட்டிலிருந்து … Read more

#Monkeypox: உலகளவில் 14,000 பேருக்கு குரங்கு அம்மை தொற்று..5 பேர் பலி – WHO

வேகமாக பரவும் குரங்கு அம்மை தொற்றால் 14,000 பேருக்கு பாதிப்பு.. ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழப்பு. உலகளவில் 70க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 14,000 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று  பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குரங்கு அம்மை தொற்றால் ஆப்பிரிக்காவில் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருவதால், பரவுவதை தடுக்கவும், உயிர்களைக் … Read more

கானாவில் பரவும் கொடிய மார்பர்க் வைரஸ் நோய்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மார்பர்க் வைரஸ் நோய் மிகவும் தீவிரமான நோயாகும், இது ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது, இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை உள்ளது. இது மேற்கு ஆபிரிக்காவில் மார்பர்க்கின் இரண்டாவது அலை ஆகும். முதன்முதலில் மார்பர்க் வைரஸ் பாதிப்பு கினியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. கடந்த மாதம் மேற்கு ஆபிரிக்க நாடான கானா, தெற்கு அஷாந்தி பிராந்தியத்தில் இரண்டு நபர்களிடமிருந்து கொடிய மார்பர்க் வைரஸின் தாக்கம் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வருடத்தின் … Read more

#Monkeypox: குரங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்தது உலக சுகாதார வலையமைப்பு!

குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார வலையமைப்பு (WHN). கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தொற்று பாதிப்பு சற்று குறைந்த நிலையில், உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் (Monkeypox) என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு … Read more

#MonkeyPox:ரேடாரின் கீழ் பரவக்கூடும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான குரங்கு பாக்ஸ் வழக்குகள் தோன்றியுள்ளதாகவும்,இந்த … Read more

கொரோனவை தொடர்ந்து அச்சுறுத்தும் குரங்கு அம்மை…! அவசர கூட்டத்தை கூட்டிய WHO…!

ஐரோப்பாவில் 100 நபர்களுக்கு மேல் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை என்று உடனடியாக அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு காய்சசல் என்ற தொற்று பல நாடுகளில் பரவி … Read more

அதிர்ச்சி…1-6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் – WHO எச்சரிக்கை!

அமெரிக்கா,இங்கிலாந்து,ஸ்பெயினில் உள்ள 1 முதல் 6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் ஆக இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகளால் கூறப்படுகிறது.இந்நிலையில்,இங்கிலாந்தில் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பாக 74  வழக்குகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதேபோன்று,ஸ்பெயினில் மூன்று வழக்குகள் மற்றும் அயர்லாந்தில் ஒரு சில வழக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் WHO தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பான … Read more

ஓமைக்ரானின் மற்றும் இரு புதியவகை மாறுபாடு கண்டுபிடிப்பு …!

ஏற்கனவே உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த இரு வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது கொரோனாவின் புதிய வகை மாறுபாடுகளும் அங்கங்கு கண்டறியப்பட்டு மக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே ஓமைக்ரானின் BA.1, BA.2, BA.1.1, A.3 ஆகிய மாறுபாடுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுதும் ஓமைக்ரான் வைரஸின் புதிய இரு மாறுபாடுகள் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. BA.4 மற்றும் BA.5 மாறுபாடுகளாகிய இந்த புதிய … Read more

நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் – ஒன்றிய அமைச்சர் ராணி!

நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 7 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் நேற்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். மேலும், இதில் 2% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு கோடி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒமைக்ரானை விட 10% வேகமாக பரவும் – WHO எச்சரிக்கை!

இங்கிலாந்தில் XE எனப்படும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவல் நீடித்து மக்களை பெரிதும் பாதித்த நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும்,தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் குறைந்து வருகிறது.இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய வகை கொரோனா – 10 சதவீதம் வேகம்: இந்நிலையில்,இங்கிலாந்தில் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார … Read more