இவர்களுக்கு ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் – தேர்தல் ஆணையம் முடிவு!

ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது தலைமை தேர்தல் ஆணையம். புலம்பெயர் தொழிலாளர்களும் வாக்கு செலுத்தும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். நாட்டில் 30 கோடிக்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்… தோல்வி பயம் வந்துவிட்டது – எச். ராஜா, பாஜக

தோல்வி பயத்தால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முயற்ச்சிப்பதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பகுத்தறிவுவாதி நாங்கெல்லாம் பெரியாரிஸ்ட் என்று சொல்லக்கூடிய கூட்டம் எதைக் கண்டாலும் பயப்படுகிறார்கள். ஏற்கனவே, இந்த வாக்கு இயந்திரம் ஒன்றுக்கு ஒன்று எந்த தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா? எதுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. … Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு ஒருமுறை கூட நிரூபிக்கபடவில்லை…. தலைமை தேர்தல் ஆணையர் கருத்து…!!

நாடாளுமன்றம் , சட்டமன்றம் தேர்தல் ஏற்பாடு பற்றி ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.அப்போது அவர் அங்கே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து இருப்பதாகவும் , வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஒரு தடவை கூட நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் … Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது…தேர்தல் ஆணையம் திட்டவட்டம்….!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவராலும் ஹேக் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டத்தை முற்றிலும் மறுத்துள்ளது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முழு நம்பிக்கையடையதாகவும் தெரிவித்துள்ளது.